காதல்

அழகான வாசமிகு பூ அவன் கையில்

கைகளில் பற்றி அழகு பார்த்தான்
வாசமெல்லாம் முகர்ந்து அனுபவித்து
பூவை வீசி எறிந்தான் அது வாட அத்துடன்
வாசமும் போக, பாவம் அவன் கை
வெப்பத்தில் சிக்கிய அழகியப்பூ

அழகிய அந்தப்பூ அவள்தான் அவனையே
நம்பி வந்தப் பெண், தன்னை அவன்
காதலி என்றே நினைத்து இருந்தவள்,
தன்னையே அவனுக்கு அர்ப்பணித்தவள்,
அவனோ அவளை ரசித்தான் தாகம் தீர,
வாடிய பூவைத் தூக்கி எறிந்தான்
வேறோர் பூ கிடைக்குமா என்று போகிறான் ...
அவளைத் திரும்பியும் பார்க்காமல் ……….
அபலைப் பெண் வாடிய பூ போனால்
ஆனதேனோ ,,,,,,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-May-19, 10:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 248

மேலே