தினம் ஒரு கேள்வி
விடியாதா என் வானம்
முடியாதா என் சோகம்
புரியாதா என் வாழ்க்கை
தெரியாதா என் பாதை
தெளியாதா என் மயக்கம்
பிறக்காதா என் மகிழ்ச்சி
பிடிக்காதா என் பயணம்
தொடராதா என் வழி
தொலையாதா என் வலி
முளைக்காதா என் சூரியன்
பிழைக்காதா என் இதயம்
தழைக்காதா என் சொல்
இளைக்காதா என் ஓட்டம்
சிரிக்காதா என் உதடு
ஏங்காதா என் மனது
நிற்காதா என் உழைப்பு
நிலைக்காதா என் களைப்பு
நிமிராதா என் தலைப்பு
விளையாதா என் விடை
உடையாதா என் தடை
முடியாதா என் கேள்வி