ஒரு துப்பட்டா பேசியது

இயற்கை இளமையின் எழுச்சியாய் பெண்ணே
உனக்கு தந்த எழில்கள் அத்தனையும் மறைக்க
சீலையை, சேலைக்குள் கச்சையாய் நான்
இருந்தது ஒரு காலகட்டம் …..
பின்னர் கச்சையெல்லாம் போய்
ரவிக்கையும் சேலையும் என்று நான் உரு மாறினேன்
காலம் சுழன்றது பெண்ணே உனக்கு
சல்வார் கமீஸ் என்று உரு மாறிய நான்
உன் அழகை அங்கத்தின் சில எழுச்சிகளை
மறைக்க 'துப்பட்டா' என்றும் மாறினேன் ஓர்
உப ஆடையாய்……… ஆனால் நான் கொஞ்சமும்
நினைக்கவில்லை அந்த இந்திரனின் ஐராவதம்
துர்வாசர் இந்திரனுக்கு அளித்த மலர்மாலையை
துச்சமாய் நினைத்ததுபோல் என்னை அதுதான்
இந்த உப ஆடை துப்பட்டாவை கேவலம்
ஒரு மேல்துண்டுபோல் போட்டுகொண்டுவிட்டாயே
பெண்ணே வெட்கத்திலும் கோபத்திலும் நான்
நான் (துப்பட்டா) யார் உனக்கு நீயே சொல்
இப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (7-May-19, 8:25 pm)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே