பார்வையில் துளிருதே

கண்கள் பேசுதே ஓவியமாய்!
மௌனம் உணர்த்தும் மொழிகளை உணராமல் விழுங்குகிறேன்!
இமைகள் மனதினுள் ஈட்டியாய்!
உதடுகள் பேசும் மொழிகளை
உணரும் நேரம் இது!
இமைகளில் தாக்கமும்,
இதழ்களில் ஏக்கமும்,
கொடுக்கின்ற உன் முகம் குடையுதே என் மனதை!
நீ விடும் பார்வையில்,
என் காதல் முளைக்குதே!
இதயத்தில் வெடிக்குதே!

எழுதியவர் : கதா (7-May-19, 3:17 pm)
சேர்த்தது : கதா
பார்வை : 403

மேலே