தேனீர் விற்பவன்
தரமான தேயிலை
இரசாயனம் கலவா சர்க்கரை
நாட்டு இனப் பசும்பால் கொண்டு
திறம்படத் தயாரித்த
சுவயான தேநீரில் குறையேதும்
காண முடியாது போக,
தேநீர்க் கோப்பை குறித்து
நித்தம் ஒரு விமர்ச்சனம்
வைக்கின்றனர்; அது
எனது தயாரிப்பல்ல
என்பதை நன்கறிந்திருந்தும்..
.
- ஆதியோகி, திருச்சி.