காதலின் புது வெள்ளம்
கண்களோ கவிதை பேச
மனமோ மெழுகாய் உருக
விரல் நுனிகளோ மார்பை வருட
நகக்கீறல் தேகத்தில் கோலமிட
இரு உதடுகளும் பேசாமல் பேச
உயிரினுள் மின்சாரம் பாய
தேன் துளியாய் வியர்வை பூக்க
கரை அடைந்த மீனாய்
இரு மனங்களும் தவிக்க
oxygen வேண்டுமென அகம் போராட
ஆனந்தத்தில் கண்கள் நெகிழ
இருவரும் முழு மதியினுள் மறைய
இது போதுமென ஜீவன்
இவ்வுலகை மறந்து
புது அண்டம் சென்று
காதலின் ஆழ்கடலை
அன்பால் கண்டதே