சருகு சித்திரங்கள்

கேளடி பெண்ணே
கவிஞனின் கதைகளையே
காத்திருந்த காலங்களை
கனவுகளில் தொலைத்தேன்

காண்பதெல்லாம் நிஜமென
நிதர்சனங்களை உதறியபடி

வான் தேவதையவளென
வான் முட்டிய கனவுகளுடன்
வஞ்சியவள்...
வாசமில்லா மலரென அறியாமலே

கரை காணும் வெள்ளமென
கனவுடைத்து காணும் போது
கனவுகள் தான் மிச்சமென
கண்களும் பூத்தது...
கனவுகளும் தூர்ந்தது...

கற்பனைக்கு பஞ்சமென
காதலியவளை உருவகப்படுத்தி
காயந்த சருகுகளில்
ஒடிந்த மயிலிறகால்
ஓராயிரம் சித்திரம் எழுதி
ஓய்ந்திருந்த வேளையிலே
ஒய்யாரமான அவள் பயணம்
ஓரமான என் நினைப்பை
ஒத்தையாக நிறுத்தியபடி

ஒடிந்த மயிலிறகும்
களுக்கென்ற மௌன சிரிப்புடன்
காற்றின் கரங்களுடன் கைகோர்த்தபடி
காய்ந்த சருகுகள் கொண்டு
இன்றைய இரவின் குளிர் போக்கிட
கனப்புத்தான் மூட்டுகின்றேன்...

சிவந்த அடிவானமாய்
முனு முனத்தபடி
கனப்பை நேசத்துடன்
அரவணைத்தபடி அந்த சித்திரங்கள்...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (8-May-19, 9:38 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 127

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே