உனக்கென்ன ஆனது..................
நண்பனாய் நீயிருந்தாய்
நன்றாக நானிருந்தேன்.
உன்னை கண்களால்
அவள் காதல் செய்தாள்,
நீயும் காதலில்
காணாமல் போனாய்.
ஒருநாள் உன்மேல்
காதல் இல்லை என்றாள்.
நீயும் உலகமே
தொல்லையென்று
இவ்வுலகைவிட்டு
சென்றுவிட்டாய்.
காதல் பாவமில்லை,
ஏமாற்றுபவரை காதலித்துவிட்டாய்
என்னையும் என் நட்பையும்
மறந்து சென்றுவிட்டாய்.
தற்கொலை என்பது தரணியில்
பிழைக்க தெரியாதவன் செய்வது,
உனக்கென்ன ஆனது, நீ வீரனடா...
எப்படி அழுதாலும் நீ கிடைப்பதில்லை
இருந்தும் கேட்கிறேன் இறைவனை
இனியொரு பிறப்பிருந்தால்
நீயே எனக்கு நண்பனாக
வேண்டும் என்று..........
----------------------------------------------------------------------------
குறிப்பு: தற்கொலை என்பது துன்பத்தின் முடிவல்ல, உனை நேசிப்பவர்களின் துன்பத்திற்கு அதுவே ஆரம்பம்.