காதல்

காதலில் விழுந்தேன் கண்ணம்மா..
காத்திட நீயும் வருவாயோ..!
கண்கள் கோர்த்தோமே கண்ணம்மா..
உள்ளம் கோர்த்திட மறந்தோமோ..!
மனதினில் மாயமானாயே கண்ணம்மா..
தேடித் தோற்றேன் என்னை..!
ஏனடி தொலைத்தாய் உன்னை..
என்னை காணவில்லையே என்னிடம்..!
உன்னில் இருப்பேனோ கண்ணம்மா..
அங்கும் உன்னையே கண்டேன்..!
காதலில் விழுந்தேன் கண்ணம்மா..
காத்திட நீயும் வருவாயோ..!
மாயையாய் மறையுமுன் என்னை..
மீட்டெடுக்க வருவாயோ கண்ணம்மா..!
காதலில் விழுவேன் கண்ணம்மா..
என்னை காதலிக்கும் ஒருத்தியிடம்..!
- வ.அசோக்
10/05/2019

எழுதியவர் : வ.அசோக் (10-May-19, 1:59 pm)
சேர்த்தது : Ashok V
Tanglish : kaadhal
பார்வை : 244

மேலே