அன்னையர் தினம்

அன்னையர் தினம்

அன்பு என்ற சொல்லுக்கு இலக்கணம் அவள்
அரவணைப்பில் அடை காக்கும் அதிசயம் அவள்
அமைதி அளித்து உறங்கச்செய்யும் அமுதம் அவள்
ஆராரோ இன்னிசை பாடும் தாலாட்டும் அவள்
ஆசையெல்லாம் சேர்த்தணைக்கும் அருமையும் அவள்
ஆருயிரே என கொஞ்சும் அழகு பெட்டகம் அவள்
ஆண்டுதோறும் ஆவல் பெருகச்செய்யும் ஓடையும் அவள்
அம்மா என்ற அழைப்பின் உணர்வில் உறைபவள் அவள்
அன்னையவள் பெருமையை கூறி போற்றிட நாள்ஒன்று போதாதே

எழுதியவர் : கே என் ராம் (11-May-19, 8:01 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : annaiyar thinam
பார்வை : 63

மேலே