தாயும் ஆவான் தந்தை
அவர் சிரித்து பேசியதை விட
என்னை அதட்டி பேசியது அதிகம்
அவர் கனவை பற்றி நினைப்பதை விட
என் தேவையை நிறைவேற செய்வதே அதிகம்
அவர் உடல் வலிமையை கவனித்ததை விட
எனக்கு வலிமையாக என்னோடு இருந்ததே அதிகம்
அவர் கலங்கி நின்று நான் பார்த்தது இல்லை
என் கண்கள் கலங்கும் போது அவர் வேடிக்கை பார்த்ததும் இல்லை
ஒன்பதரை மாதம் என்னை சுமந்தவளையும்
அவர் மனதோடு என்னையும் சுமந்தவர்
பிரசவ வலியை அவர் அனுபவிக்காமல் இருக்கலாம் ஆனால்
இரு உயிருக்காக அவர் அனுபவித்த மன போராட்டத்தை
அவர் உயிர் போகும் நிலையிலும் மறப்பதில்லை
எத்தனை துன்பம் வந்தாலும் அப்பா என்னும் சொல்லை
கேட்டதும் அவர் எதையும் நினைவில் கொள்வதும் இல்லை.....
தன் பிள்ளைக்கு உயிர் கொடுத்து உருக்கொடுத்து
உருவாக்கி வாழ வைத்து வாழும்
ஒவ்வொரு தந்தையும் தாயும் ஆனவரே......