ரகசியம் 9

அன்பு தன் சிந்தனையில் மிகவும் ஆழ்ந்து இருக்க அந்த வானொலி பெட்டியின் செய்தி...
ரகசியம் கேட்க வேண்டுமா?
சுவாரஸ்யமான விஷயங்களை அரிய வேண்டுமா?
பல வித்தியாசமான சத்தம் கேட்டு
குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் எவருக்கும் இது ஒரு வாய்ப்பு.....
கண்களை மூடி இரு கால்களையும் சேர்த்து விரல்களை தொடர்ந்து
எண்ணுங்கள்.....
குழப்பங்கள் கண் முன் நிறுத்தி
நிலையான தீர்வை தேடுங்கள்.......
என செய்தி ஐந்து நிமிடங்கள் வந்து
மறைந்தது...
மேலும் பாடல் நிகழ்ச்சி ஆரம்பித்தது....
அன்பு தன்னை மறந்து அமர்ந்து கொண்டிருந்தான்.... நான் நிலையான தீர்வை கண்டு கொண்டேன்...... இங்கு என்ன நடக்கிறது என்று கண்டறிந்து வெளியே கொண்டு வருவேன்...
என தன்னை குழப்பங்களில் இருந்து
தெளிவுபடுத்தி கொண்டான்..
பிறகு தன் படுக்கைக்கு சென்று
உறங்கினான்....
விடியற்காலை சூரிய கதிர்கள் ஒளி வீச தன் உறக்கத்தில் இருந்து மெல்ல எழுந்தான்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-May-19, 12:28 pm)
பார்வை : 72

மேலே