ஒளிக்கு ஒளி

உலகிற்கு பல்ப்..
மின்சக்தி.. கொண்டு
மின்னொளி வழங்கினார்
தாமஸ் ஆல்வா எடிசன்...
அவர் நிறுவிய ஜெனரல்
எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு
ஒளி வழங்கும் அறிவுச்
சூரியன்.. நற்குணச்
சந்திரன் மாடசாமிக்குப்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சூரியனை யாரும்
பார்க்காத இந்திய நேரத்தில்...
சூரியன் பார்த்துப் பணி
புரியும் பாக்கியம் மாடசாமிக்கு..
சூரியன் மறைந்த பின்பும்
கல்லூரிக் காலத்தில்
புத்தகங்களோடு உறவாடியதால்
இது சாத்தியமானது..

ஆக்ரோஷமாய் இல்லாமல்
அனாயாசமாய் படிக்கும்
திறன் மாடசாமிக்கு...
அது அமெரிக்காவிற்கு
அவனை இழுத்துச் சென்றது...

(தலை) முடி இழந்தாலும்
பணியில் தலைமை
முடி தரித்தவன்...
மாடசாமி... இவன்
ஓர் கிராமத்துக் குயில்...

கற்றார்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு.. அதனால்
இக்குயில் அமெரிக்க
நகரங்களில் இசைக்கிறது...
அமைப்புப் பொறியியல்
பல்லவி.. சரணங்கள் கொண்டு...

சூரியப் பகலில்
அறிவுச் சூரியன் உன்னை
மனமார வாழ்த்துகிறேன்...
வசந்த விடியல்கள் உனதாகட்டும்...
வானமும் வசப்படட்டும்...
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...

அன்புடன்...
முன்னாள் ஜெனரல்
எலக்ட்ரிக் பொறியாளர்..
என்னாளும் நண்பன்...
அன்பன். ஆர். சுந்தரராஜன்.
👍💐👏🌹😀🌷🍰🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-May-19, 11:05 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 302

மேலே