துரைராஜ்

போட்டோ ஷாப் செய்யாத
வெள்ளைச் சிரிப்பு
நண்பன் துரைராஜினுடையது...
என்னதான் போட்டோஷாப்
செய்தாலும் இந்தச் சிரிப்பை
எந்தக் கணினியாலும்
வெல்ல முடியாது...

வற்றாத நதியாய் இவனது
சிரிப்பு... அது அவனது
வெள்ளை மனதின் பிரதிபலிப்பு...

குளிர் தென்றலாய் இவனது
நட்பு.. அது இன்னும்
நெருங்கி வரட்டும்..
நட்புக்களைத் தொடர்ந்து வரட்டும்...

ஆசிரியரிடம் கற்பவர்கள்
மாணவர்கள்..
பேராசிரியர் துரைராஜிடம்
கற்கும் மாணவர்கள்
மாண்பு மிக்கவர்கள்...

எட்டுத் திக்கும் இவனது
மாணவர்கள்... ஒட்டுமொத்த
உலகை உயர்த்துவார்கள்...

அன்பு துரைராஜ்
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
உனது புன்னகையில்
வசந்தமும் வானமும் மட்டுமல்ல..
அனைத்தும் வசப்படட்டும்...

அன்புடன்... நண்பன்
அன்பன். ஆர். சுந்தரராஜன்.
😀👍🌹👏🙏💐🎂🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (14-May-19, 11:07 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 200

மேலே