என் தோழிக்கு வாழ்த்து

அதிகாலை கதிரவன் தோன்றுகையிலே
இரவெல்லாம் படிந்து இருந்த பனி துளி ஈரம்
மண்ணின் மீதிருந்து மறைவது போல
உன் வாழ்வில் நீ கடந்த கவலைகளை
மறக்க வைக்கவே
ஆதவனாய் உன் மகன் தோன்றினானே.....

மலர்ந்த அவன் முகம் கண்டு உன்னை
மருள செய்த யாவும் மறைந்து போக
மாற்றங்களை தரும் உன்
மகவு உன் பலமாக வாழ வாழ்த்துகின்றேனடி
என் அருமை தோழியே.....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (16-May-19, 12:27 pm)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : en thozhiku vaazthu
பார்வை : 585

மேலே