நன்னட்பு
ஆதரவாய் இல்லை என்றாலும்
இருளில் மின்மினியாய் நின்றாய்
உடனேயே இல்லை என்றாலும்
உடனிருக்கும் நினைவுகள் தந்தாய்
அதிகம் பேசவில்லை என்றாலும்
அதிகம் சிரிக்க வைத்த நொடிகளாய் வந்தாய்
மெய் புணர்ந்த நட்பில்லா விட்டாலும்
என் வாழ்வின் நீளம் வரை மீளும்
மெய்யூன்றிய நட்பிது தான் என
எனை சொல்ல வைத்து சென்றாய்