காதல்

l காதல் தோட்டத்தில் பூத்திருந்த ஒற்றை
மாமலரடி நீ உன்னை நாடி வந்த
கரு வண்டு நான் உன் பதம் தஞ்சமென
மலரும் வட்ட வட்ட விழியால்
நீ என்னைப் பார்க்க அது
தூவிய மல்லிகையாய் என்னுள்ளத்தை நிறைக்க
அதிலிருந்து சிந்தியதே வண்டெனக்கு
காதல் தேனாய் அதை உண்டு நான்
உன் மீது மையல் கொண்டேன்
என்னை மறந்து உன் மடியில் உறங்கினேனே
கண் விழுத்துப் பார்க்கையிலே உந்தன்
மலர் கரங்கள் என் மீது நீ உறங்கிக்கொண்டிருந்தாய்
இப்போது என் மீது மையல் கொண்டு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-May-19, 4:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 182

மேலே