காதல்

காதலெனும் சோலையை சென்றடைந்தேன்
அங்கு சோலைக்குயில் ஒன்று தன் காதலன்
வரவிற்கு ஸ்ரீங்கார ராகம் இசைக்கக் கேட்டேன்.
உன் வரவிற்கு காத்து நின்றேன் அங்கு நீயும் வந்தாய்,
வந்து 'அன்பேவா' என்று இதழ்விரித்து சிரித்து
வரவேற்றாய் , அதில் அந்த குயிலின் இசையும்
தோற்றதடி கண்ணம்மா என் காதலியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-May-19, 1:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 174
மேலே