அழகா இருக்கேனா

இந்த புடவையில் அழகா இருக்கேனா என்கிறாய்
புடவையில் மட்டுமா நீ அழகு....

இந்த புடவையில் அழகா இருக்கேனா என்று
நீ கேட்பதே அழகா...

எந்த புடவை கட்டுவது என்று என்னுடன் நீ நடத்தும்
பட்டிமன்றம் அழகு...

புடவை கசங்காம வண்டியில கூட்டிட்டு போடான்னு
சொல்வாயே அது அழகு...

புடவை கட்டிருக்கேனே பூ வாங்கித்தர மாட்டியா என
கேட்பாயே அது அழகு...

உன் புடவை என் மேல் உரசவோ யாருமில்லையெனில்
படரவோ நடப்பாயே அது அழகு...

தண்ணீர் பட்டுவிடும் என்று பயந்து பயந்து... கடற்கரைவிட்டு
திரும்புகையில் பாதி நனைத்திருப்பாயே... அடடா அடடாஅது அழகு...

உன் வீட்டில் விட்டு திரும்புகையில் உன் முந்தானை அசைந்து
என்னை வழி அனுப்புமே... அதுவே அதுவே பேரழகு...

எழுதியவர் : இராஜவேல் (16-May-19, 12:51 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 3770

மேலே