காதல்

என்னை முதல் முதலாய்ப் பார்த்து
'உன் மீது எனக்கு காதல் என்றான்'
தென்றலே சங்கீதம் பாடி வந்ததுபோல்
அவன்தானா இன்று என்னை ,'என் கண்
முன் நிற்காதே போய்விடு. என்றான்
தென்றலே தாக்கும் புயலாய் மாறியதேனோ
நான் அறியேனே …...நேற்றுவரை என் பின்னே
வளையவன்தான் நீதானே என் உலகமடி
என் அத்திப்பூவே என்றெல்லாம் கூறி
அலையலையாய் என்மீது காதல் அலையாய்
மோதி இன்பமூட்டி ….. இன்றோ ஏனோ
நான் கசந்துவிட்டேன் அவனுக்கு இப்படி
சுனாமி பேரலைபோல் என்னை கோப
வார்த்தைகளால் தாக்குகின்றானே
கடல் அலையே நீயே இதற்கு பதில் சொல்வாய்
இன்னும் நான் வாழ்ந்து என்ன பயன்
காதல் கசந்தது வாழ்வும் இதோ நான்
உன் கரங்களில் என்னை ஏற்றுக்கொள்
என்று கூறி …...கண்ணை மூடிக்கொள்ள
கரம் ஒன்று பற்றி அவளை கரை சேர்க்க
கண் திறந்து பார்த்தாள் பாவை அவள்
அவளை வெறுத்த அதே கரங்கள் மீண்டும்
காதல் தேடி அவள் காலைப் பற்றியது
'மன்னிப்பாயா கண்ணே என்று கூனி குறுகி
பெண்புத்தி பின் புத்தி என்பார் ,,,,,இங்கு
இவன் புத்தி பின் புத்தி ஆனதேன்
அவன்தான் பதில் கூறவேண்டும்
நிதானம் இல்லா காதல் பாய்மரம் இல்லா
படகு போன்று …….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-19, 4:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 250

மேலே