இதுவரை என்னை வென்றது யார்

கடவுளுக்கும் எனக்கும் ஒரு போட்டி.
உனக்கு பிடிக்காததை உன்னை செய்ய செய்வேன் என்கிறார் அவர்.
நீ எனக்கு பிடிக்காததை செய்ய செய்து எனது சுதந்திரத்தை பறிக்க உன்னால் முடியாது என்கிறேன் நான்.
கடுமையான போட்டி நிலவுகிறது.
அவர் என்னை வெல்லும் ஒவ்வொரு தருணத்திலும் என் மனம் அவரைத் திட்டித் தீர்த்திடும்.
கொஞ்சங்கூட ரோசமோ இரக்கமோ இன்றி மறுபடியும் அவரே ஜெயிப்பார்.
நீயே ஜெயிப்பாயெனில் என்னை எதற்காகப் படைத்தாயடா?
நீயு ம் ஜெயிப்பதற்காக.
என்ன வேடிக்கை இது?
என் வெற்றியை நீ எதிர்ப்பார்க்கிறாயா?
ஆம், நிச்சயமாக.

எதனால் நீ என் வெற்றியை விரும்புகிறாய்?
எதிர்பார்க்கிறாய்?
அது நான் வெற்றி பெற வேண்டும் என்பதால்.
அப்படியெனில் இவ்வளவு நாட்களாக நீ வெற்றி பெறவில்லையா?
ஆம், நான் வெல்லவில்லை.
அப்படியெனில் என்னை வென்றது யார்?
உன் கோபம், உன் பந்த பாசம், உன் காமம், உன் அறியாமை உட்பட எல்லாம் உன்னால் அனுமதிக்கபட்டவையே, உன்னை வென்றன.
அப்போ அவற்றை வெல்வதற்கு நீயே வழிசொல்லிக்கொடு. நான் வென்றுவிடுகிறேன்!
அதற்காகவே சித்தம், புத்தி சேர்த்து சிந்திக்க ஏதுவாக மூளை என்ற ஒரு அமைப்பைத் தந்துள்ளேன்.
அதை சரியாகப் பயன்படுத்து.
நீ வெற்றி பெறுவாய்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-May-19, 9:21 am)
பார்வை : 3144

மேலே