முன்னேறு தோழா !

தோழா!
தடைகள் தடம் பதிந்து
உன்னை தடுப்பதற்கு முன் நீ
தடைகளை தகர்த்துவிடு

தடைகள் தண்டனைகள் அல்ல
தவறுகள் குற்றங்கள் அல்ல
தமிழ் வளர்க்க தமிழனே
தடையாய் இருப்பதா ?

தோழா!

தமிழை பிற மொழிகள் ஆள
நாம் சும்மா இருப்பதா - நீ
முள்வேலிக்கு நடுவே
முடங்கி கிடப்பதா?

மண்ணை முட்டி முட்டித் தான்
விதைகள் முன்னேறி மரமாகின்றன!
அறியாமைத் தடைகளை
தகர்த்தவன் தான் ஞானியாகிறான்!
இன்பத் தடைகளை தகர்த்தவன் தான்
போதி மரத்து புத்தன் ஆனான் !
விடுதலைக்கு விழியை
விதைத்தவன் தான்
புரட்சி தமிழன் ஆனான் !

தோழா!

அறிவை வளர்க்க ஆண்டவன்
தடையானால் கோவில்களை
இடித்து விடு! - உறவுக்கு
உறவுகள் தடையானால்- உறவை
உதறித் தள்ளி விடு !
இலக்கை எட்டி பிடிக்க கைகள்
தடையானால் கையை வெட்டி விடு !
நீ முன்னேற முதலடி முக்கியமல்லவா?

முன்னேறு! இளைஞனே! முன்னேறு !
முட்டுகட்டைகளை தகர்த்து முன்னேறு !

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Sep-11, 7:29 pm)
பார்வை : 1421

மேலே