மழை

பருவம் சற்று தப்பி அதிகமாய்ப்
பெய்தாலும் திட்டீத் தீர்ப்பார்
பேய் மழையே போறும் நீ பெய்தது
என்றெல்லாம் , பெய்யாமல் போனாலும்
வெய்திடுவார் இன்னும் உனக்கு கருணை
வரவில்லையா மழையே மலடியின் மனமா
உன் மனம் என்றெல்லாம் - அதனால்
நீயே சொல்வாய் இந்திரரே இந்த
மண்ணிற்கு இனியும் மழை நான்
தரவேண்டுமா என்று வேண்டி நின்றான்
மழைக்கென்று மக்கள் வேண்டும் வருணன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-May-19, 6:57 pm)
Tanglish : mazhai
பார்வை : 290

மேலே