கட்டபொம்மன் மீசைகாரன் எங்க அப்பா

அடி
கட்டபொம்மன் மீசைகாரர் எங்க அப்பா
என்னை விட்டு போனாரே!
அன்பை கொட்டி போனாரே!

நீ வாரேன்னு தான சொல்லிக்கிட்டு போனே....!
நீ போரேன்னு தெரிஞ்சா விட்டுருப்பேனா
உன்னை விட்டுருப்பேனா! நான் உன்னை விட்டுருப்பேனா!

கட்டுக்கோப்பா எங்களை வளர்த்த - கட்ட பொம்மன் நீ! -
ஒரு
கட்டுப்பாடும் - அன்பில்
தட்டுப்பாடும் கண்டதில்ல உன்னிடத்தில்!
கண்டதில்ல உன்னிடத்தில்!!

நான் அழுதேன் உன்பிள்ளை - ஊரே அழுததே!
என்ன சொல்ல !
உன்ன போல நல்ல அப்பன் ஊரிலில்லை! -
நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் .....நான்தான் உன் பிள்ளை !
நான்தான் உன் பிள்ளை !

அடி
கட்டபொம்மன் மீசைகாரன் எங்க அப்பா
என்னை விட்டு போனாரே!
அன்பை கொட்டி போனாரே!

உன் வாழ்த்தோட வரும் பண்டிகையெல்லாம்
இப்பம் காத்தோடு போச்சே!
காத்தோடு போச்சே!
உன் மத்தாப்பு சிரிப்பை எப்ப இனி கேப்பேன்!
எப்ப இனி கேப்பேன்!

எப்ப எதை கேட்டாலும்
தப்பாம வாங்கி தந்த!
இப்ப உன்னை கேட்குறேன் !
எப்பப்பா நீ திரும்பி வருவ!
எப்பப்பா நீ திரும்பி வருவ!

நன்றி என்ற வார்த்தை! உனக்கு போதுமா..!
நீ! தந்த இந்த வாழ்க்கையை மறக்க முடியுமா!
மறக்க முடியுமா!
மறக்க முடியுமா!

எழுதியவர் : நம்பி. கே. (1-Jun-19, 12:34 am)
சேர்த்தது : நம்பி கே,
பார்வை : 1571

மேலே