சுவாமியே ஐயப்பா சரணம் சரணம்

அஹம் பிரம்மாஸ்மி !
அஹம் பிரம்மாஸ்மி !
அறிந்தேன் என் ஸ்வாமி! ஐயப்பா!
அறிந்தேன் என் ஸ்வாமி! (2)

ஆதி குருவே!
ஜோதி வடிவே!
பணிந்தேன் என் ஸ்வாமி! ஐயப்பா!
பணிந்தேன் என் ஸ்வாமி

சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே !
சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே!
சுவாமியே ஐயப்பா! சரணம்! சரணம்!
என் ஸ்வாமி!

முட்களை தாங்கிய
பாதம் இரண்டும்
முக்தியை காணும் நாள் வருமோ!

கற்களை தாங்கியே
ஏறிய பாதம்!
கரைசேரும் நாளும் கூடிடுமோ!
என் ஸ்வாமி!என் ஸ்வாமி!

பம்பையில் குளித்திட
பாதங்கள் நனைந்திட
பாவங்கள் கரைந்ததே! என் சுவாமி!

வாவரின் கோட்டையில்
பேட்ட து துள்ள யில்
பேதங்கள் மறைந்ததே! என் சுவாமி!

சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே !
சுவாமியே ஐயப்பா! சரணம்! சரணம்!
என் ஸ்வாமி!

அஹம் பிரம்மாஸ்மி !
அஹம் பிரம்மாஸ்மி !
அறிந்தேன் என் ஸ்வாமி! ஐயப்பா!
அறிந்தேன் என் ஸ்வாமி

தரணும் திறனும் - உன் பொன்னடி காணும்
தரிசனம் தரணும் என் ஸ்வாமி!

மரணம் அறுக்கும் - உன் சன்னதி தேடி
வரணும் வரணும் என் ஸ்வாமி!

பதினெட்டு படியில் பாதங்கள் பதிந்திட!
பற்றது பறந்ததே என் ஸ்வாமி!

இருமுடி கட்டில்! இருளது மறைந்து!
இறையருள் கிடைத்ததே என் ஸ்வாமி!

பந்தள பாலா! பந்தம் அறுத்து
பற்றனும் உன் பதமே! என் சுவாமி!

பரம தயாளா!பார்வை படாதா
பற்றினேன் உன் பதமே!என் சுவாமி!

சித்தியை தருவாய்! சின்முத்திரை நாதா!
பற்றினேன் உன் பதமே!என் சுவாமி!

சிவனே! ஹரனே! ஹரி ஹ ரனே !
சுவாமியே ஐயப்பா! சரணம்! சரணம்!
என் ஸ்வாமி!
என் ஸ்வாமி!.

பாடல் எழுதியவர்
நம்பி.கே.

எழுதியவர் : நம்பி.கே. (1-Jun-19, 12:49 am)
சேர்த்தது : நம்பி கே,
பார்வை : 82

மேலே