தீயினாற் சுட்ட மெய்

சேர்ந்தார் போல்
ஐந்து நொடிகள்
சேர்த்து நின்றால்
உயிர் பிரிந்து விடுமோ?
என்னவோ...?
அந்த
பேருந்துக்கு....!
தள்ளாத வயதில்
அவதியாய் பொதியுடன்
தடுமாறி ஏறினார்...
எழுந்து நின்று
இடம் கொடுக்க
எவருக்கும்
மனமில்லை....
எனக்கும் தான்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (1-Jun-19, 5:19 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 213

மேலே