திருவேடகம் - பாடல் 11
கலிவிருத்தம்
(விளம் விளம் விளம் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 11
- 032 திருவேடகம், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
பொருளுரை:
யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் இழுத்துக் கொண்டு வரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற, திரு ஏடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை, (புகலி - புதிதாகக் குடியேறினவன், சீர்காழி) தென் புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய பாடல்கள் பத்து. விருப்பத்துடன் பாடிப் போற்றுங்கள்.
இப்பாடல்களை பக்தியுடன் ஓதவல்லவர்கட்கு பாவங்களெல்லாம் நீங்கி நன்மை பெறுவர்.