பச்சை இலை வைத்து அதில்

துயரும் போதெல்லாம் தோள் கொடுத்தாயே
துணிவை விதைத்து துயர் துடைத்தாயே

அயலார் தூற்றிய போதெல்லாம் அரவணைத்தாய்
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வித்திட்டாய்

தேடுதலின் போதெல்லாம் பின் தொடர்ந்தாய்
திக்குத் தெரியா நிலையில் கலங்கரை ஒளியானாய்

ஆனால், நண்பா

ஆத்திரத்தில் சீறிய நாகத்தை அடித்ததைப் போல்
ஆற்ற இயலா துரோகத்தை செய்தது ஏனோ

பச்சை இலை வைத்து அதில் பல வகை உணவிட்டு
பசியோடு வருகையிலே அதில் நிரம்ப மலமிட்டது

போலானதே உன் செயல் உள்ளத்தில் நல்லோனே
போதுமடா உன் துரோகம் பொரி கலங்கி பித்தானேன்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jun-19, 8:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 100

மேலே