கல்லூரி

ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை
கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை
கடமைக்கு கல்லூரி
கற்றுவாங்க வகுப்பறை
சோர்வில் தேற்றிவிட தோழி
துன்பத்தை காற்றில் விட தோழன்
ஆண்டுகள் ஓடினாலும்
அடுத்த நொடி பற்றி கவலை இல்லை
வேலைக்கு சென்றாலும்
வியர்வை இன்றி உழைத்தாலும்
கல்லூரி மரத்தடி
நிழல் தரும் சுகம்
வேறெங்கும் கிடைக்காது

எழுதியவர் : செந்தில் குமார் அ (12-Jun-19, 1:21 pm)
சேர்த்தது : sendil
Tanglish : kalluuri
பார்வை : 4745

மேலே