​அன்னைத் தமிழைக் காப்போம் ​

தேன்கூட்டைக் கலைக்க நினைக்கிறது
தேளிலும் கொடூரமான நச்சுக் கரங்கள் !

மதவெறி அறியாத மானமிகு மனங்களை
நசுக்கத் துடிக்கிறது வஞ்சக நெஞ்சங்கள் !

இனவெறி இல்லாத இரக்க உள்ளங்களை
இரும்பான இதயங்கள் சீண்டிப் பார்க்குது !

சமதர்மம் காக்கும் சமதத்துவ மண்ணில்
சந்தர்ப்பம் தேடுது சமயத்தை நுழைத்திட !

சாதிமதம் மொழியை மறந்து வாழ்ந்திடும்
சகோதரத்துவ உறவை பிரிக்க நினைக்குது !

​அன்பும் பண்பும் நிலைத்தத் தமிழகத்தை
​அறநெறி பிறழ்ந்து ​அடக்கியாளத் துடிக்குது !

​தித்திக்கும் தமிழை நிலையாக அழித்திட
திணிப்பைத் துவக்குது குறுக்கு வழியில் !

ஒற்றுமைக் காத்து ஓங்குபுகழ் தாய்மொழியை
எவரும் வீழ்த்திடா வகையில் காத்திடுவோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Jun-19, 8:06 am)
பார்வை : 1156

மேலே