மழைக்கோர் வேண்டல்

பருவத்தில் வீணா பெய்யாமல் போய்விடாதே
பருவ மழையே உனையே நம்பி வாழும்
மண்ணும் மாந்தரும் போவதெங்கே -புவியில்
நீரற்று வாழ்தலும் சாதியம் இல்லையே
ஆதலால் அருள்வாய் மாமழையே மனமிரங்கி
இந்த மண்ணையும் மனிதர் வயிற்றையும்
நனைக்க பொலிவாய் மழையாய் விரைந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 12:09 pm)
பார்வை : 78

மேலே