ஒரு சொட்டு குடிநீருக்கு

வீதியெல்லாம் ஏழைப் பெண்களின்
வெற்றுப் பானை குடம்
மேடையெல்லாம் வெறும் கூச்சல் கூப்பாடு
அரசியல்வாதிகள் கூட்டம்
அதர்ம பூமியிலே வான்முகில் கூட்டம்
விலகி ஓட்டம்
தேர்தல் வருது போகுது
ஆறும் வரவில்லை நீரும் வரவில்லை
ஒரு சொட்டு குடிநீருக்குப் இங்கே பஞ்சம்
கண்ணீரில் மக்கள் வெள்ளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-19, 10:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே