என் இடுப்பை உன் முரட்டுக்கைகள்

உன் கட்டைமீசை என் முகத்தில்
கத்தி போல் குத்தியது
குத்திய இடத்திலெல்லாம்
உன் சிவப்பு உதடு தடவியது.

என் இடுப்பை உன் முரட்டுக்கைகள்
முழுதாய் அள்ளிப் பற்றியது
திமிறி நான் துள்ளும் போது
முந்தானையைப் பிடித்து இழுத்தது.

கழுத்தோரம் உன் மூச்சிக் காற்றும்
காதோரம் உன் அமுத வாயும் - என்னை
காதலோடு கட்டி இழுத்து பல
காதல் கதை பேசியது.

காணாத புது உலகை - இன்றைய
கருக்கலில் நீ காட்டி வைத்தாய்
கண கணப் பான உன் மார்பில்- இந்த
கன்னியை நீ கட்டிப் போட்டாய்.

என் இதயம் நுழைந்தவனே
எல்லா குணமும் கொண்டவனே - எப்பொழுதும்
இந்நிலையே இறுதிவரை வேண்டுமய்யா
இன்னொரு பிறப்பிருந்தால் நீயே துணை வேண்டுமய்யா .
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jun-19, 5:07 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 95

மேலே