காதல்

நடமாடும் நகைக்க கடையோ இல்லை
பட்டுப் புடவைக்கு விளம்பர'மாடெல்லோ'
என்றில்லாது எளிய ஆனால் அழகிய உடையில்
பின்னிய கூந்தலை பூவைத்து நெற்றியில் பொட்டுவைத்து
காரணங்களில் சிறிய தங்க லோலாக்கு மூக்கில்
சிவப்புக்கல் புல்லாக்கு , நீண்ட கழுத்தில் மெலிதாய்
தொங்கும் தங்க சங்கிலியும்
நிலவொத்த ஒளி முகத்தில் மாம்பழ கன்னங்கள்
சிரித்தால் அழகு குழிகளால் என் மனத்தைக் குழிபறிக்க
புன்னகை ஏந்தி வந்தாள் காதலி
எளிய அழகின் இலக்கணமாய் தேன் தமிழில்
குயிலாய்ப் பாடி மயிலாய் ஆடிவந்தாள்
என் மனதைத் தேடி என்னை நாடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jun-19, 5:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 261

மேலே