விநாயகா

அரணார் பெற்ற
ஆதி மைந்தனே
எமக் கரணாய் நிற்பாய் கணநாதா

ஆயிரம் ஆதவன்
ஔியை உடையாய்
எம் இருள் களைவாய் குணசீலா

இந்திரன் முதலா தேவரின் ஆணவம்
அழித் தொழித்தாயெம் குருநாதா

ஈன்றவர் அவரே
உலகம் என்றுணர்த்தி
ஞானம் புகட்டினாய்
உமைபாலா

உலக தத்துவத்தை
உன்னுருவாக்கி
உண்மை உணர்திய
சிவ பாலா

ஊனுடல் உருக்கி
உன்பதம் பணிந்தேன்
ஆண்டருள்வாயெம்
கணநாதா

எண்ணும் எழுத்தும்
எழுத முன்பே
உன் சுழி போட்டாம் சிவ நாதா

ஏரினை பூட்டி
உழுதிட முன்னும்
உன்னை வணங்கினோம்
அருள்பாலா

ஐயம் நீக்கிடும்
ஐங்கரத்தோனே
வெற்றியை தருவாய் கணநாதா

ஒன்பது கோளும்
உன்னடி பணியும்
வினைகள் எமக்கில்லை விநாயகா

ஓதுவோர் நாவில்
செந்தமிழாய் வரவே
உன்புகழ் பாடனும்
வேத நாதா

ஔடதம் வேண்டாம்
உன்துதி பாடிட
பிணிகள் அறுந்தோடுதே
ஆணைமுகா

எழுதியவர் : பவிதன் (22-Jun-19, 6:08 pm)
சேர்த்தது : பவிதன்
Tanglish : vinayagaa
பார்வை : 205

மேலே