சிட்டு
..............சிட்டு............
🐥🐥🐥🐥🐥🐥🐥🐥
தோகைகளைக் கிழித்தெடுத்து
ஓலைகளில் கூடு கட்டி
காற்று அன்னை தாலாட்ட
காலமெல்லாம் உறங்குகிறாய்
மாடிகளாய் வீடுகட்ட
மனிதர் எல்லாம் மாறிவிட்டோம்
மனை அமைக்கும்
உன் கலையில்
மாற்றம் ஏதும்
செய்யவில்லை
வம்பான மனிதர்கள்
வாழுகின்ற இவ்வுலகில்
பண்பாடு அழிக்காத
பண்பாளன் நீதானோ ?
க.செல்வராசு
🐥🐥🐥🐥🐥🐥🐥🐥