வானத்து முகில் பொழியவில்லை
வாடிய பூங்கொடி
பூக்கவில்லை
வானத்து முகில்
பொழியவில்லை
தேடி வரும் தேன்மலர் வண்டு
பாடவில்லை
தோட்டத்தில் ஒரு சோகம்
தென்றலுக்கு வருத்தம்
தோட்டக்காரனின் வாளியில்
ஒரு சொட்டு நீரில்லை
அரசியல் மேடையில்
கொண்டாட்டம் நிற்கவில்லை
தலைவனுக்கு காகிதத்தில் பூமாலை !