வருடம் மூன்று தடவை
வம்சம் வளரணுமுனு சிறு - தெய்வ
வழிபாட்டை வைத்தாங்க
வழிபடும் இடத்திலெல்லாம் - பெரும்
மரத்தை நட்டாங்க
வருடம் மூன்று தடவை
வழிபட்டும் வந்தாங்க
நீரைப் பெற வேண்டி
நிலையான குளம் வெட்டினாங்க
நிறைந்த பயத்தோடே
நீர் நிலையை காத்தாங்க
சேர்ந்த தண்ணிக் குளிர்ச்சிக் காண - சுற்றி
அரிய செடி கொடிகளை இட்டாங்க
எல்லாமும் சிதையலாச்சு
எல்லோர் மனமும் மாறலாச்சு
சொல்லவொண்ணா துயரம் எல்லாம்
சூழ்ந்துக் கொள்ளும் காலமாச்சு
பொன்னான மனங்கொண்ட
புனிதமான நல் மனிதர்களே
சிறப்போடு வாழணும்னா - பழைய
புனித நிலையை பேண வேண்டும்.
--- நன்னாடன்.