இயற்கை

வசந்தத்து மழைத்துளிகளுக்கு ,
சிலபோது பனிக்கட்டிகளும்
வாடைக்காற்றோடு மண் வாசனையும் சேர்ந்து
கிடைக்க வருமா என்று ஏங்கியதுண்டு
வசந்தம், நீயும் வந்து போய்விட்டாய்
மழைத்தூறலும் தாராது
மண் வாசனையும் தாராது ;
கொடியில் மல்லிகை மொட்டாய் இருந்தே
பூக்காது வீணே மண்ணில் வீழ்கின்றதே
நீ மழைத்துளிகளும் தாராது போனதனால்
மழைதுளியும் மண் வாடையும், பூக்கும்
மல்லிகை ரோசாவின் வாசமமும் இல்லாது
போனால் நான் வாரேன் என்று என்னவளும்
தாய் வீட்டுக்கு போனவள் வாராது போனாள்
இது என்ன புது வசந்தம் வசந்தம் இல்லாது
நீதான் இப்படி ஏன் நீ வந்து போனாய்
என்று சொல்லவேண்டும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-19, 4:34 pm)
Tanglish : iyarkai
பார்வை : 936

மேலே