காலத்தின் கைக்குள்

அன்று இரசித்த யாவும்
இன்று விசித்திரமாய்
மாறலாம்
விசித்திரமான ஒன்றை
நாளை இரசித்திடவும்
செய்யலாம்
அன்று அரும்பிய மலர்
இன்று விரும்பிடும் மலராகலாம்
விரும்பிய மலர் ஒன்று
நாளை வாடிடவும்
செய்யலாம்
அன்று நேசித்த யாரோ
இன்று நமதாகி போகலாம்
நமதாகி போனவர்கள்
நாளை யாரோவாகி போகலாம்
அன்று பெய்த மழைக்கு
இன்று மாற்றம் தெரியலாம்
மாற்றம் கண்ட பூமி
நாளை இயல்பு நிலை
திரும்பலாம்
காலத்தின் கைக்குள்
வானம் கோளம் போடலாம்
ஞாலம் ஜாலம் செய்யலாம்
கைவிடப்பட்ட
யாவுமே
காலத்தின் கைக்குள்
அடங்கலாம்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Jun-19, 7:14 am)
Tanglish : kaalaththin kaikkul
பார்வை : 75

மேலே