ஜென்னலோரம் நான்

வெகுஜெனம் உலாவும்
வீதியை பார்த்தபடி
ஜென்னலோரம் நான்...

வேடிக்கை கண்டேன்
வித்தைக்காரன்
ஒருவன் மாயாஜாலம்
காட்ட...விந்தையான
மக்கள் சிலர் அதை
பார்த்து இரசித்து
பணத்தை பரிசாய்
கொடுத்தனர்....

டிங்..டிங்..டிங்...
கோவில் மணி ஓசை...
ஃபஅட்...ஃபஅட்..ஃபஅட்...
கோபுரத்தை விட்டு
விரு விருவென பறந்த
புறாக்களின் இறக்கை ஒலி...
பார்த்தேன்...
மஞ்சல் கலந்த வானம்...
கோவிலின் வாசலை
கண்டேன்....தண்ணீரில்
நனைந்து காய்ந்திருந்தது
அதன் மேலே வண்ணம்
நிறைந்த கோலம்
ஒன்று பூத்திருந்தது..
பக்தர்கள் நடக்கையிலே
பக்கத்து அடியிலே
நேற்றிரவு பசிக்கு ஏங்கிய
வயிற்றுடன் பட்டினியாய்
படுத்து உறங்கிய
யாசகர்கள்.....தட்டை
மேலும் கீழுமாய்
அசைத்துக் கொண்டிருந்தனர்
ஒன்றிரண்டு சில்லரைகள்
இருந்த தட்டோ இறக்க இராகத்தை
இசைத்துக் கொண்டிருந்தது...

நங்...என்று விழுகிறது
சில்லரை காசு ஒன்று
முகத்தை திருப்பியவாரே
போட்டு சென்று விட்டார்
அந்த முகமறியாத மனிதர்...

கா...கா...கா....
என்றே எழுந்த குரல்..
எதிர் வீட்டு மாடியில் இருந்து
வந்த எதிரொலி
பார்வையால் நோக்கினேன்
பொங்கல் என்று
நினைக்கிறேன்...
காகத்திற்க்கு
படையலாகி விட்டது....

என்னடா உலகம்
வியப்புடன் நின்றேன்

வித்தை காட்டினான்
ஒருவன் ...அவனிடத்தில்
பணத்தை கொட்டினர்
மக்கள்....

தட்டை நீட்டினான் ஒருவன்
அவனிடத்தில்....
முகத்தை கூட காட்டத
மக்கள்....

பசியால் வாடிடும்
ஒருவன்....அவன்
கண்ணருகே
காகத்திற்க்கு
விருந்து வைக்கும்
மக்கள்....

என் நேரத்தை
ஜென்னலோரமும்
பார்வையை
ஜெனங்கலோரமும்
செலவிட்டதில்
எனக்கு கிடைத்தது
மன கசப்பும்
மக்களிடையே ஒரு வித
சலிப்பும் தான்....

மாற்றம் உண்டாகுமோ
மக்களிடத்தில்...?
என்றே நின்றேன்
ஜென்னலோரத்தில் நான்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Jun-19, 8:44 am)
பார்வை : 58

மேலே