ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 008
தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.
அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி
பாடல் 1 : காதல் சொல்வது உதடுகள் அல்ல
படம் : பத்ரி
கவிதை என்பது புத்தகம் அல்ல,
பெண்கள் தான், சகியே,
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல,
நீ மட்டும், சகியே
------------------------------------------------------------------
பாடல் 2 : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
படம் : ஷாஜஹான்
ஹே கவிதை என்பது மொழியின் வடிவம்,
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா
காதலி தான் கவிதை னு புரிஞ்சுக்கிட்டேன் அப்படீன்ற தோனியில தான் இந்த பாடல்கள் அமைஞ்சுருக்குது தானே ? நீங்க என்ன சொல்றீங்க ?