ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 012
தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.
அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி
பாடல் 1 : ஆலங்குயில் கூவும் ரயில்
படம் : பார்த்திபன் கனவு
சரி, கண்ணாடி
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!
------------------------------------------------------------------------------------------------------
பாடல் 2 : ஏதோ செய்கிறாய்
படம் : வாமனன்
கண்ணாடி பார்க்கையில்
என் கண்கள் உன்னை காட்டுதே
-------------------------------------------------------------------------------------------------------------
பாடல் 3 : சொல் பேச்சு கேக்காத சுந்தரியே
படம் : தில்லாலங்கடி
கண்ணாடி நான் பார்த்தால் முன்னாடி வந்தானே
உனக்கிந்த காதல் சுகம் புரியாதே
ஒரு சந்தேகம் தன் ,கண்ணாடியை காதலி தான் பாத்து காதலன் முகம் தெரியனுமா எப்பவுமே?
ஒரு வாட்டியாச்சும் காதலனை பாக்க சொல்லுவோம் , காதலி முகம் தெரியுதா னு கேப்போம்.
அப்படி எதுனா பாடல் வரிகள் உங்களுக்குஜ் தெரியுமா ?
தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க!!! ஆவலா காத்துட்டு இருக்குறேன்