நறுந்தொகை 18

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர். 18

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமை யுடையவராகார்.

பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும்.

அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவர் ஆவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-19, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே