துளிகள்

தவளை சத்தம் ஓய்ந்ததும்
முடிவுக்கு வருகின்றது
பாம்பின் விரதம்
=
ஊரடங்கு உத்தரவு அமுல்.
வெறிச்சோடிய வீதிகளில்
சுதந்திரமாய் தெருநாய்கள்.
=
அதிவேக நெடுஞ்சாலை
வீதி விதிகளை மீறி
நகரும் நத்தை.
=
கைகள் இல்லை
கம்பியில் தொங்குகிறது
கசாப்புக்கடை ஆடு.
=
நான்காவதும் பெண்
பிறந்து விடுகிறது
குடும்பக்கட்டுப்பாடு எண்ணம்.
=
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Jun-19, 1:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thulikal
பார்வை : 151

மேலே