இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே - நீதி வெண்பா 22

நேரிசை வெண்பா

துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே
மன்னும் இனிமையால் மாறாகிப் - பன்னும்
கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசமாகை யால். 22 நீதி வெண்பா

பொருளுரை:

மிகுகின்ற இருமலும் துட்டரும் நிலையான இனிமையினால் மாறுபட்டு முறையே சொல்லப்படும் கசப்பையும், நஞ்சு போலுங் கடுஞ்சொல்லையும் கண்டால் சீக்கிரத்தில் வசப்படுதலால் ஒப்பாகும்.

கருத்து:

இருமல் தித்திப்பினால் அதிகரித்தலும், கசப்பினால் அடங்குதலும் போல, துட்டர் இன்சொல்லால் மிஞ்சுதலும் வன்சொல்லால் அஞ்சுதலும் உடையவராவர்.

இனிமை என்றது தித்திப்பையும், இன்சொல்லையும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-19, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே