கனா

பெரிய வானம் !
கருத்த மேகம் !
கனத்த மழை !
பெய்யும் நேரம் !

இருண்ட பொழுது !
புகை மூண்டவிடத்து !
கருத்த தேகம் !
விரித்த கண்கள் !
விடும் மூச்சுக்காற்று !
என் மேல் பட்டு !
என் வியர்வை பொங்க !
மூச்சு வாங்க ஓட எழ !
கால் தடுக்கி கீழே விழ !
சேற்றுத்தண்ணீர் முகத்தில் பட !
செத்தோம் பிழைத்தோம் என
விழுந்தடித்துத்தெழுந்தோட !!
ரத்தம் உரியும் சத்தம் கேட்டு !
திரும்பி பார்த்தால்.?........ முகத்தில்
தண்ணீர் தெளித்த தங்கை !!
சாம்பிராணி போடும் அம்மா !!
அப்பா கையில் காபி !!

விடிந்தது காலை
முடிந்தது கனவு
வந்தது நினைவு.

----- சரோ

எழுதியவர் : சரோ (1-Jul-19, 11:40 pm)
சேர்த்தது : Saro
Tanglish : kanaa
பார்வை : 618

மேலே