அப்பா என்ற நான்
என்ன துன்பம் விளைவித்தோனோ
நான் என் தந்தைக்கு
என் மகன் என்னை இம்சைக்கிறான்
கிஞ்சித்தும் பரிதாபம் இன்றி
அவன் பிழைக்க அறிவை பெருக்க கூறினால்
ஆற்றொன்னா வார்த்தையில் அர்ச்சிக்கிறான்
அழகான காலத்தின் மாடியில் அமர்ந்துள்ளான்
அவமான காரியங்களை செய்யத் துணிகிறான்
எளிதில் எவற்றையும் கற்றுக் கொள்ளும் வயது
ஏனோ எதிர்மறையில் ஈடுபடுது அவன் மனது
அவனை தோளில் சுமந்து நான் சாமியாய் பார்க்கிறேன்
தொழுநோய் வந்ததைப் போல் என்னை துரத்தி விடுகிறான்
தவித்து பலரிடம் நான் சங்கடமாய் நின்றதைப் போல்
தனையனுக்கு கூடாதென்று தத்தளித்து வாடுகிறேன்
தந்தைச் சொல் கேட்காமல் தறுதலையாய் திரிகிறான்
தடைகள் பல விதித்தாலும் தயங்காமல் மீறுகிறான்
நல்லோர் தீயோர் யாருக்கும் தாகம் தீர்க்கும் தண்ணீர் போல்
என்னால் பிறந்த குழந்தைகளுக்கு குடையாய் நானே மாறிடுவேன்
எவ்வகைத் துன்பம் வந்திடுனும் என்னை அழித்தேனும் வாழவைப்பேன்.
---- நன்னாடன்.