சிலுசிலுனு ஆயிடுச்சு

நேத்து சரியா மாலை 4.30க்கு தூத்துக்குடியிலிந்து பெங்களுரு செல்வதற்காக தம்பி கிளம்பிக் கொண்டிருந்தான். நான் அவனை வழியனுப்பி வைப்பதற்காக அலுவலக வேலைகளை விரைவாக முடித்துவிட்டு புறப்பட்டு சென்றேன். சரியாக மாலை 4.10 இருக்கும் மாநகரை அடைந்துவிட்டேன். பின்பு மாமா கடைக்குச் சென்று எனக்காக காத்திருந்த தம்பியை அழைத்துக் கொண்டு இருவரும் தொடர்வண்டி நிலையம் நோக்கி ஹோண்டா சைன் இருசக்கர வாகனத்தில் பயணித்தோம். சரியாக மணி 4.20 இருக்கும் தொடர்வண்டி நிலையத்தை அடைந்தோம். இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கான அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். பின்பு பார்வையாளர் அனுமதி சீட்டையும் வாங்கிக் கொண்டு வண்டி நிற்கும் நடைமேடைக்கு சென்றோம். தடம் 2 இல் வண்டி புறப்பட தயாராக இருந்தது. பருக தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து நலமாக சென்று வா என வழியனுப்பி வைத்துவிட்டு நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். அங்கிருந்து வாகனத்தை எடுத்து புறப்பட தயாராகிவிட்டேன் அதற்குள் நண்பனின் கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.எடுத்து, என்ன நண்பா ? என்று கேட்டேன். எங்கு இருக்கிறாய்? என்று கேட்டான். தூத்துக்குடியில் என்று நான் பதிலுறைத்தேன். அவன், அங்கேயே இரு எனக்கு புது கைப்பேசி வாங்க வேண்டும் நான் வந்துகொண்டு இருக்கிறேன் என்றான். சரி என்று அவனுக்காக காத்திருந்தேன். சரியாக மணி மாலை 6.45 கதிரவன் இரவு வணக்கம் சொல்லும் நேரம் வந்தடைந்தான். பின்பு இருவரும் அதே இருசக்கர வாகனத்தில் வி.வி.டி சிக்னல் அருகேயுள்ள பூர்விகா மொபைல் சோரூமுக்குச் சென்றோம். பின்பு இன்னொரு நண்பனும் வந்து சேர்ந்து கொண்டான். சிறிது நேரம் கூட ஆகவில்லை புதுக் கைப்பேசி வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். பிறகு புதுக் கைப்பேசி வாங்கியிருக்கிறோமில்லையா விருந்தாக சூப் குடிக்க அழைத்துச் சென்றான். அங்கு சூப் கொதித்து வரும் ஆவிக்காற்றின் மணம் எங்களை சுண்டியிளுத்தது. உடனே, மூன்று சூப், முட்டைப்போண்டா, மீன் பொறியல் என ஆர்டர் செய்துவிட்டு மூவரும் நாற்காலியில் அமர்ந்தோம். அப்போது, இரண்டு பள்ளி மாணவர்கள் சிரித்துப் பேசிக்கொண்டு எங்களைக் கடக்கும் வேளையில் அதிலொருவன், டேய் மச்சான் இன்னைக்கி அவ என்னே பாக்கும்போது அப்டியே எனக்கு சிலுசிலுனு ஆயிடுச்சுடா! என்று பேசியவாறே கடந்து சென்றனர். நான் உடனே என் நண்பனை அழைத்து அந்த பசங்க பேசுன வார்த்தய கவனிச்சியா என்றேன். அவன் இல்லங்க " சிலுசிலுனு ஆயிடுச்சு " என்றான் என்றேன். அந்த வார்த்த செம்மையா இல்ல என்று பேசியவாறே விருந்தும் முடிந்தது. பின்பு அங்கிருந்து கைகளை அலம்பியவர்களாய் வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம். சரியாக மணி இரவு 10 இருக்கும் வீட்டைவந்து அடைந்தேன். இரவு உணவு முடித்துவிட்டு உறங்க தயாரானேன். ஆனால், அந்த "சிலுசிலுனு ஆயிடுச்சு" வார்த்த மட்டும் உறங்காம என் எண்ணத்தில் உலாவிக்கொண்டிருந்தது. எப்போ, உறங்கினேன் என்று தெரியவில்லை அயர்ந்து உறங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை மணி 6.30 க்கு உறக்கத்திலிருந்து எழுந்தேன் சில நொடிகளிலே அந்த வார்த்த என் நினைவுக்கு வந்தது என் மனசு ஏனோ "சிலுசிலுனு ஆயிடுச்சு "
நன்றி, அந்த பள்ளிச் சிறுவனுக்கு.....

எழுதியவர் : வேல்விழி (2-Jul-19, 9:05 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 121

மேலே