என் மனைவியும் மனைவிதான்

பத்தினி இங்க வாடி
@@@@@
யாரைடா நண்பா பத்தினின்னு கூப்பிட்ட?
@@@@
ஏன், என் மனைவியைத்தான்டா கூப்புட்டேன்.
@@@@@
உன் மனைவி மட்டுந்தான் பத்தினியா? என் மனைவி என்னோட அத்தை பொண்ணுடா. எனக்காகவே பொறந்து வளந்தவடா. சின்ன முதலே நான் தான் அவளோட கணவன்னு எங்க அத்தை அவள ஊட்டி வளத்தாங்கடா. நான் வேலைல சேந்த ஆறு மாசத்திலேயே
முத்துமாரிய அத்தை தன் சொந்த செலவில் எனக்கு திருமணம் பண்ணி வச்சாங்கடா. என்னைத் தவிர யாரையும் கனவிலகூட நெனச்சிருக்கமாட்டாடா. நானும் அவளத் தவிர வேற எந்தப் பொண்ணையும் தப்பான எண்ணத்தில பாக்கமாட்டேன்டா. என் மனைவி முத்துமாரியும் பத்தினிதான்டா.
@@@@@
யாருடா இல்லன்ன சொன்னது? அட முட்டாள் முகேசு சமஸ்கிருதத்தில 'பத்னி'ன்னா மனைவின்னு அர்த்தம்டா. 'என் மனைவியும் பத்தினிதான்'னு சொன்னா 'என் மனைவியும் மனைவிதான்'னு அர்த்தம்டா. தமிழில் ஒழுக்கம் தவறாத பொண்ண கற்புக்கரசின்னு சொல்லறோம். பத்னிங்கற சொல்லுக்கு தெருக்கூத்து காலத்திலேயே தவறான அர்த்தத்தை உருவாக்கிட்டாங்கடா.
@@###
ஓ.... அப்பிடியா?
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Patni = mistress.

எழுதியவர் : மலர் (3-Jul-19, 3:33 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 184

மேலே